முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வை வீழ்த்த சிறிய கட்சிகளை கூட்டு சேர்க்கும் அகிலேஷ் - மாயாவதி

புதன்கிழமை, 27 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

லக்னோ, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக சிறிய கட்சிகளை கூட்டு சேர்க்கும் முயற்சியில் அகிலேஷ்-மாயாவதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர பிரச்சாரம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களும், ராஷ்டிரிய லோக் தளம் 3 இடங்களும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப் போவதில்லை என இக்கூட்டணி தெரிவித்திருந்தது. மேலும், வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் மாயாவதி, அகிலேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டணியில் 2 கட்சிகள்

இதனிடையே, பா.ஜ.க.வை தோற்கடிக்க மேலும் பல்வேறு சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் ஆகிய தொகுதியில் பிரபலமாக உள்ள சாதி பின்னணி கொண்ட இரண்டு கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்துள்ளனர்.

ஓ.பி.சி. பிரிவினர்

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், நிஷாத் கட்சி, ஜன்வாடி கட்சி(சோசலிஸ்ட்) மற்றும் ராஷ்டிரிய சமந்தா தாள் ஆகியவை எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு மாநிலம் முழுவதும் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளனர் என்றார். இதில், நிஷாத் கட்சி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் கட்சி. சஞ்சய் சிங் தலைமையிலான ஜன்வாடி கட்சியில் (சோசலிஸ்ட்) ஓ.பி.சி.  பிரிவில் வரும் சவுகான் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். அதே போல், ராஷ்டிரிய சமந்தா கட்சியில் குஷ்வாஹா என்ற மற்றொரு ஓ.பி.சி பிரிவினர் அதிகம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து