முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025      தமிழகம்
Ramadoos 2025-08-17

சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பா.ம.க. பொதுக்குழு நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அன்புமணியை கடும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், பொதுக்குழுவின் இறுதியில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

பொதுக்குழு, செயற்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பொதுவாக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில், அந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம். இங்கே பேசியவர்கள், பொதுவாக நிர்வாகக் குழுவில், ஒரு கட்சியை எப்படி நிர்வாகம் செய்வது என்று பேசிவருகிறோம். இன்றைக்கு நிர்வாக குழுவில் பேசப்பட்ட செய்தியை உள்வாங்கி செயற்குழுவில் பேசப்பட்டது. அனைவரும் சிறப்பாக பேசினீர்கள். வரவேற்கத்தக்க கருத்துகள். மிகப்பெரிய வெற்றியை அடைய அது செயல்படும். 

ஒரு கட்சியில் அதிக அதிகாரம் கொண்ட குழு பொதுக்குழு. அதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், எதைப் பேசி எதை விடுவது என்று எனக்குள்ளே ஒரு குழப்பம். எனக்கு இருக்கும் ஆதங்கத்தை கொட்டி, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு மணி நேரம் தேவை. அந்த வகையில், பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து வந்தது, எந்தக் கூட்டணி என்பது. எனக்கு அதிகாரம் கொடுத்துவிட்டீர்கள். எப்போது கூட்டணியை அறிவிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல முடிவெடுப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். 

10.5 சதவீத இடஒதுக்கீட்டை நாம் நிச்சயம் பெறுவோம். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. செலவு செய்து கூட்டத்தை கூட்டி பிரமாண்டத்தை காட்டுகிறார். இந்த தேர்தல் அவருக்கு பதில் தரும். இந்தத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அது வெற்றியை தரும். என் பின்னால் வரும் மக்கள் எப்போதும் என்னை கைவிட்டதில்லை. 

நீங்கள் வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அயராது பாடுபடவேண்டும். நான் கடந்த 10 நாட்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி, யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று கருத்து கேட்டேன். மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன். அது மிகப்பெரிய வெற்றியை தரும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏன் என்றால், நான் நினைப்பது நிச்சயமாக நடக்கும். அப்படிப்பட்ட சூழல் வந்துள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது தூக்கம் வருகிறது. புத்துணர்ச்சி பிறக்கிறது. மகிழ்ச்சி வெள்ளம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து