முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரகிரகணம்: திருப்பதி கோவிலில் 16, 17-ம் தேதிகளில் நடை அடைப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

சந்திரகிரகணம் நடைபெற உள்ளதால் திருப்பதி கோவிலில் 16-ம் தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 5 மணி வரையும் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 16-ம் தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நடக்கிறது. மறுநாள் (17-ம் தேதி) அதிகாலை 1.31 முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ம் தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 5 மணி வரையும் நடை அடைக்கப்பட்டிருக்கும். இடைப்பட்ட நேரமான 16-ம் தேதி மதியம் 12 மணி முதல் அன்று மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு 17-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆனிவார ஆஸ்தானம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக 17-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகே ஏழுமலையானை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பாதயாத்திரையாக மலை ஏறி வரும் பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் திவ்யதரிசன டோக்கன் மற்றும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிதிவாசம் காம்ப்ளக்ஸ், ரெயில்வே நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன் ஆகியவை 16-ம் தேதி வழங்கப்பட மாட்டாது. அதேபோல் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ம் தேதி மதியம் ஏழுமலையான் கோவிலில் நடக்க வேண்டிய கல்யாண உற்சவம், ஊஞ்சல், சகஸ்ரதீப அலங்காரம் சேவை ஆகிய கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. எனவே கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், சந்திர கிரகணம் மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகியவற்றை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து