முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      உலகம்
Ukraine-war-2025-0

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள, முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.

மாஸ்கோ மற்றும் நிஸ்னி நோவ்கொரோடுவில் உள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 400 கி.மீ. நீளம் கொண்ட கோல்ட்செவோய் பைப்லைன்கள் மூலம் விமான எரிபொருள், டீசல், பெட்ரோல் ஆகியவை ரஷ்ய படைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த எரிபொருள் பைப்லைன்களை தாக்கி அழித்ததாக உக்ரைன தெரிவித்துள்ளது. இது ரஷ்யப் படைகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு பதிலடியாக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ராமென்ஸ்கி மாவட்டம் அருகே உள்ள கட்டமைப்பை இலக்காக நிர்ணயித்து மூன்று எரிபொருள் லைன்களையும் தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. இந்த எரிபொருள் பைப் லைன்கள் 3 மில்லியன் டன் வரை விமான எரிபொருள், 2.8 மில்லியன் டன் வரை டீசல், 1.6 மில்லியன் டன் வரை பெட்ரோல் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. நேற்று காலை ரஷ்யா, தென் உக்ரைன் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். மத்திய போல்டாவா பிராந்தியில் உள்ள கியாஸ் நிலையம் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து