முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய மியூசியம் எகிப்தில் திறப்பு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      உலகம்
Egypt 2025-11-01

Source: provided

கெய்ரோ : உலகின் மிகப்பெரிய மியூசியம் எகிப்தில் திறக்கப்பட்டது.

எகிப்தில் உலகின் மிகப்பெரிய மியூசியம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெரிய பிரமிட் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தின் எத்தகைய கலாசார அடையாளங்களை அருங்காட்சியகம் கொண்டுள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்வதே இதன் நோக்கம்.

உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளது. அருங்காட்சியகத்தில் உள்ள மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது எகிப்திய மன்னர் டுட்டன்காமுனின் கல்லறை. இந்தக் கல்லறை முதல் தடவையாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மியூசியம் அக்டோபர் 2024-ல் பொதுமக்களுக்கு ஓரளவு திறக்கப்பட்டது. பிரமாண்ட சிலைகள், பழங்கால கல்லறைகளுடன் வரிசையாக அமைந்துள்ள 6 மாடி படிக்கட்டைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. இது அருகிலுள்ள பிரமிடுகளின் காட்சியுடன் கூடிய பரந்த சாளரத்திற்கு வழிவகுக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் ரோமானிய சகாப்தம் வரையிலான 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகங்கள் மற்றும் மறுசீரமைப்பு பட்டறைகளுக்கு திறந்திருக்கும் சேமிப்பு பகுதிகளும் இந்த வளாகத்தில் அடங்கும். நவம்பர் 4-ம் தேதி முதல் பொதுமக்கள் இந்த மியூசியத்தை பார்வையிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து