Idhayam Matrimony

முதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

நாங்குநேரி : முதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பிறகு நேற்று முன்தினம் நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். நேற்றும் அதே தொகுதியில் அவர் பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்து அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவு திரட்டினார். தனது பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது,

எப்போதும் முதல்வர் பதவி கனவிலேயே ஸ்டாலின் இருக்கிறார். அதில் இருந்து அவர் வெளியே வர வேண்டும். எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. மக்களின் ஆதரவும் அபரிமிதமாக உள்ளது. ஆனால் ஸ்டாலின் புருடா விட்டுக் கொண்டிருக்கிறார். மக்களிடம் எப்போதும் டூப்பைத்தான் சொல்கிறார். மக்களை ஏமாற்றும் இவர் ஒரு அரசியல் வியாபாரி.

பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இவர் நிறைவேற்றினாரா? ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதை போல பொய்யான வாக்குறுதிகளை வாரியிறைத்து ஓட்டு வாங்கி விட்டார். ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும் பொய் சொன்னார். ஆனால் நாங்கள் எது நடக்குமோ அதைத்தான் சொன்னோம். ஆனால் அவர் செய்ய முடியாததை எல்லாம் சொன்னார். மக்களிடம் இரக்கத்தை பெற்று ஓட்டு வாங்கி விட்டார். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போல மக்களை ஏமாற்றி விட்டார். 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைகள் திருப்பி தரப்படும் என்றார். இதை நம்பிய தாய்மார்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து ஏமாந்தனர். ஸ்டாலின் சொன்னபடி நகைகளை திருப்பி தர வேண்டுமா? வேண்டாமா? பிரச்சாரத்தின் போது அவர் சொன்னதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். மக்களின் ஆசைகளை தூண்டி வெற்றி பெற்று விட்டார். மாதம் ரூ. 6 ஆயிரம் தருவோம் என்றார். இது எவ்வளவு பெரிய புருடா? இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து