முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிப்ளமோ முடித்து ஐக்கிய அரபில் பணியாற்றும் இந்திய செவிலியர்கள் பணியிழக்கும் அபாயம்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

துபாய் : ஐக்கிய அரபு நாட்டு அரசின் புதிய கல்வித்தகுதி விதிமுறையால், பட்டயப் படிப்பு முடித்து பணியாற்றி வரும் இந்திய செவிலியர்கள் ஏராளமானோர் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலையிழந்துவிட்ட நிலையில் வேறு வழியின்றி தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின்படி, மருத்துவமனையில் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களின் குறைந்தபட்சம் நர்சிங்கில் பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவந்துள்ளது. அவ்வாறு பட்டப்படிப்புக்கும் குறைவாக பட்டயப் படிப்பு முடித்து பணியாற்றி வரும் செவிலியர்களை மருத்துவமனைகள் நீக்கி வருகின்றன. அந்த வகையில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இதுவரை வேலையிழந்துள்ளார்கள் என வளைகுடா செய்தி தெரிவிக்கிறது. நர்சிங்கில் டிப்ளமோ படித்து வேலையிழந்த செவிலியர்கள் மீண்டும் பணிக்கு சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது. வேலையிழந்த செவிலியர்கள் 2020-ம் ஆண்டுக்குள் அந்நாட்டு கல்வி அமைச்சகம் அங்கீகரித்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்தால் அவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலைக்குச் சென்று, அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகங்களில் பி.எஸ்.சி. நர்சிங் முடித்த ஏராளமான இந்திய செவிலியர்கள் இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்து சான்று பெற்றாலும், அது அங்கீகாரம் இல்லாததாகவே கருதப்படும்.

கேரளாவில் உள்ள நர்சிங் பட்டயப் படிப்பு படித்து முடித்து சான்று பெற்றால் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் அரசு ஏற்கிறது. ஏனென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய கல்வித்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நர்சிங் கவுன்சில் கேரள நர்சிங் கவுன்சில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

கேரளாவைச் சேர்ந்த பெண்கள்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் செவிலியர்கள் பணியில் இருக்கிறார்கள். இதில் ஏராளமான பெண்கள் வெளிமாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் நர்சிங் முடித்து பணி செய்வோர்தான் இப்போது சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட நர்சுகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து