எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டத்தோடு பல்வேறு முன்னெடுப்புகளை இப்போதே தொடங்கிவிட்டது தி.மு.க.. ஒரு பக்கம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் முழக்கத்தோடு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணிகளை தி.மு.க. தொடங்கியுள்ளது. இந்த சூழலில் ‘ உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார் ஸ்டாலின்.
இதன் ஒரு பகுதியாக நேற்று தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பட்டுக்கோட்டை, பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பட்டுக்கோட்டை தொகுதி தி.மு.க. வசம் உள்ளது. பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் வசம் உள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தொகுதி மக்களின் மனநிலை, தி.மு.க. அரசு மீதான மக்களின் எண்ணவோட்டம், தி.மு.க. அரசுக்கான ஆதரவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டறிந்தார்.மேலும், தொகுதியில் கட்சியினரின் மனநிலை, கட்சியினருக்கு உள்ள குறைகள், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து தனித்தனியாக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


