குத்துச் சண்டை விளையாட்டில் தலையிடுவது உங்கள் வேலையல்ல - பிந்த்ரா மீது கோபப்பட்ட மேரி கோம்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      விளையாட்டு
Mary Kom 2019 10 19

புது டெல்லி : குத்துச் சண்டை விளையாட்டில் தலையிடுவது உங்கள் வேலையல்ல என பிந்த்ராவுக்கு மேரி கோம் கோபமுடன் பதிலளித்து உள்ளார்.

ஜப்பானில் அடுத்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.  இதில், குத்து சண்டை போட்டிகளும் இடம்பெறும்.  இதற்கு முன் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவர்.  அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியாளர்கள் ஆவர். குத்து சண்டைக்கான இந்த தகுதியாளர்களை தேர்வு செய்யும் ஒலிம்பிக் தகுதியாளர் போட்டிகள் அடுத்த வருடம் பிப்ரவரியில் நடைபெறும். இதில் பங்கேற்க, இந்திய மகளிர் குத்து சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான மேரி கோம் சோதனை போட்டிகள் எதுவுமின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜூனியர் உலக சாம்பியன் குத்து சண்டை வீராங்கனையான நிக்கத் ஜரீன் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவுக்கு எழுதிய கடிதத்தில், சோதனை போட்டியில் மேரி கோமும் பங்கேற்க வேண்டும்.  அதன்பின்பே வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.  எனினும் இவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா தனது டுவிட்டரில் ஜரீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், மேரி கோம் மேல் அனைத்து வகையிலும் எனக்கு மரியாதை உள்ளது.  உண்மை என்னவெனில், விளையாட்டு வீரருக்கு நிரூபிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். பிந்த்ரா மற்றும் ஜரீன் இருவரும் ஜே.எஸ்.டபிள்யூ பிரிவில் உள்ளவர்கள் ஆவர். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றவரான மேரி கோம், பிந்த்ரா மீது தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளார். பிந்த்ரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவர்.  ஆனால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நானும் பல தங்க பதக்கங்களை வென்றுள்ளேன்.  குத்து சண்டை விளையாட்டில் தலையிடுவது அவரது வேலையல்ல. துப்பாக்கி சுடுதல் பற்றி நான் பேசுவதில்லை.  அதனால் அவரும் அமைதியாக இருப்பது நல்லது.  அவருக்கு குத்து சண்டை போட்டிக்கான சரியான விதிகள் கூட தெரியாது.  துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு முன் ஒவ்வொரு முறையும் அவர் சோதனை போட்டியில் விளையாடி விட்டு செல்வார் என்று நான் நினைக்கவில்லை என கோபமுடன் கூறியுள்ளார்.  இந்த வருடம் மே மாதத்தில் நடந்த இந்திய ஓபன் குத்து சண்டை அரையிறுதி போட்டியில் மேரி கோமிடம் விளையாடி ஜரீன் தோற்று போனார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து