முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து வேலூர், மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தென்காசி மாவட்டத்தை வருகிற 22-ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்காக தென்காசியில் பிரம்மாண்டமாக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் தென்காசி சென்று விழாவில் பங்கேற்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா வருகிற 27-ம் தேதி காலை 10.45 மணிக்கு கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த விழாவிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் தொடக்க விழா 28-ம் தேதி காலை 10 மணிக்கு நடை பெறுகிறது. இதிலும் முதல்வர் நேரில் சென்று கலந்து கொள்கிறார். செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா செங்கல்பட்டில் 29-ம் தேதி பகல் 12.15 மணி அளவில் நடைபெறுகிறது. இதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பங்கேற்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். புதிய மாவட்டங்களுக்கான கலெக்டர் அலுவலகம் அமையும் இடங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்ய உள்ளார். செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களில் இன்று ஆய்வு நடைபெறுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் 23-ம் தேதியும், கள்ளக்குறிச்சியில் 24-ம் தேதியும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து