எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார்.
69 -வது உலக அழகி போட்டி லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. இதில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்டமாக நடைபெற்ற போட்டிகளுக்கு பிறகு ஜமைக்கா, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனர். பல்வேறு போட்டிகளுக்கு பின் உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில், ஜமைக்காவின் டோனி ஆன் சிங், பிரான்ஸ் நாட்டின் ஓப்லி மெஸினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இறுதிச்சுற்றில், அவர்களின் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன . இதில், ஜமைக்கா அழகி டோனி ஆன்சிங் வெற்றி பெற்று, உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனிசா பொன்சி டி லியான் மகுடம் சூட்டினார்.
பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக அழகி பட்டம் வென்ற டோனி ஆன்சிங்கிற்கு தற்போது 23 வயது ஆகிறது. இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலையில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |