முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025      இந்தியா
Delhi-2025-12-23

புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்காள தேச தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை அந்நாட்டு போராட்டக்காரர்கள் கடந்த வாரம் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியாவா பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இதனைக் கண்டித்து டெல்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள தேசத்தில் உள்ளஉள்ள வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்காள தேசம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகத்துக்கு வெளியே பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து இன்றும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வங்காள தேச தூதரகங்களுக்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விளக்கமளிக்க, வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் ஆஜராக அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதனிடையே வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து