சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸை எதிர்கொள்ள தயார்: சிங்கப்பூர் பிரதமர் உறுதி

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      உலகம்
Singapore-pm 2020 01 24

கரோனா வைரஸை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தற்போது, கரோனா வைரஸ் சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதோடு தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு இருப்பதாகவும், அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறும்போது,

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸை கையாள சிங்கப்பூர் தயராக இருக்கிறது. ஏனெனில் 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸால் ஏற்பட்ட மோசமான சூழலை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். கரோனா வைரஸ், சார்ஸ் வைரஸ் அளவுக்கு ஆபத்தானதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார். சார்ஸ் வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் 33 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து