முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      உலகம்
Charles 2023 06 18

Source: provided

 லண்டன் : பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் இரண்டாம் அவர்களின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ (வயது 65) மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது இளம் பருவத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த புகாரை இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வர்ஜீனியா ஜியூப்ரே திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டனமும் விமர்சனமும் எழுந்தன. இதைத்தொடர்ந்து அவர், “அரசுப் பட்டங்களைத் துறக்கிறேன்; என்மீதான குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே பொது வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்,” என தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரசுப் பட்டங்கள் மற்றும் சலுகைகளை பறிப்பதற்கான முறைப்படி நடவடிக்கையை மன்னர் சார்லஸ் தொடங்கி உள்ளார். அவருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார். மேலும் ஆண்ட்ரூவின் வின்ட்சர் இல்லத்தை காலி செய்யுமாறு பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அரண்மனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, பட்டங்கள் மற்றும் கவுரவங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இப்போதிலிருந்து அவர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார். அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; அவர் மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்வார்,” என கூறப்பட்டுள்ளது.

மன்னர் சார்லசின் இந்த உத்தரவின் பேரில், இளவரசர் ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரீஸ் ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து