மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் 5 பேர் கைது

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      இந்தியா
Maharashtra- arrested-5-naxals 2020 01 29

நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் நக்சலைட் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில  மாநிலங்களில் இவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நக்சலைட்டு பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் இந்த குழுவினரை வேட்டையாடும் பணியில் மாநில சிறப்பு தனிப்படையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் பாம்ரஹட் பகுதியில் சிறப்பு போலீசார் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் அப்பகுதியில் பதுங்கி இருந்த 5 நக்சலைட்டு பயங்கரவாதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து