முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனையை சமன் செய்த ராணா

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      விளையாட்டு
25-Ram-98

Source: provided

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது. இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தையும் சேர்த்து இதுவரை இந்தியாவுக்காக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அதில் ஹர்ஷித் ராணா 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

இதன் மூலம் இந்தியாவுக்காக முதல் 8 ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற அஸ்வினின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 16 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். அந்த பட்டியல்: 1. அகர்கர்/ பிரசித் கிருஷ்ணா - 19 விக்கெட்டுகள், 2. பும்ரா - 17 விக்கெட்டுகள்,3. அஸ்வின்/ஹர்ஷித் ராணா - 16 விக்கெட்டுகள்.

ஆஸி., வீராங்கனைகளிடம் அத்துமீறல்

கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த வியாழக்கிழமை (அக்.23) ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் இருந்து அருகிலுள்ள ஒரு பிரபலமான ஓட்டலுக்கு ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து வந்தபோது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில், கண்காணிப்புக் கேமராக்கள், அருகில் இருந்தவர்கள் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் அகில் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து