முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      விளையாட்டு
25-Ram-90-copy

Source: provided

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். விக்கெட் வீழ்த்திய வீரர்களிலும் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா 6 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

எளிதில் வெற்றி...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

3 போட்டிகளில்...

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன் மற்றும் விக்கெட் வீழ்த்திய டாப்-5 வீரர்கள் யார் - யார்? குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிக ரன் அடித்த டாப்- 5 வீரர்கள்:

1. ரோகித் சர்மா - 202 ரன்கள்.

2. மேத்யூ ஷார்ட் - 112 ரன்கள்.

3. ரென்ஷா - 107 ரன்கள்.

4. மார்ஷ் - 98 ரன்கள்.

5. கூப்பர் கனோலி - 84 ரன்கள்.

அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 5 வீரர்கள்:

1. ஹர்ஷித் ராணா - 6 விக்கெட்டுகள்.

2. வாஷிங்டன் சுந்தர் - 5 விக்கெட்டுகள்.

3. ஆடம் ஜம்பா - 4 விக்கெட்டுகள்.

4. ஹேசில்வுட்/அக்சர்/ஸ்டார்க்/அர்ஷ்தீப் சிங் - 3 விக்கெட்டுகள்.

5. சிராஜ்/ஓவன்/மேத்யூ குஹ்னேமன் - 2 விக்கெட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து