எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெலிங்டன் : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம் என்று நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் தெரிவித்தார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. தேனீர் இடைவேளை வரை மட்டுமே நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில் இந்தியா 122 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து அணியில் அறிமுகம் ஆகியுள்ள உயரமான பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் தான். இவர் புஜாரா (11), விராட் கோலி (2), விகாரி (7) ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம் என்று கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூசி.பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் கூறியதாவது, முதல் நாள் ஆட்டத்தில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அணியின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். அவர்களுடைய பேட்டிங் வரிசைக்கு அவர்தான் முக்கிய துருப்புச்சீட்டு. அவரை முன்னதாகவே வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம்.புஜாரா உள்பட முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை முன்னதாகவே வீழ்த்தும்போது வெளிப்படும் எமோசன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.உலகின் எல்லா இடங்களிலும் ரன்கள் குவிப்பவர் விராட் கோலி. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீசினால் விராட் கோலி திணறுவார் என்ற ஒரே திட்டத்துடன் சென்றால் அது புத்திசாலித்தனமாக இருக்காது. ஆடுகளம் எப்படி ஒத்துழைக்கிறதோ, அதற்கு ஏற்ப திட்டம் தீட்டி அவரை விளையாட வைக்க விரும்புவோம். ஸ்டம்பில் வீசும் பந்தை எதிர்கொள்வதில் அவர் வல்லவர். நான் முதலில் சற்று திணறினேன். அதன்பின் சமாளித்து பந்து வீசிய சிறப்பானது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |