முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் டி - 20 உலக கோப்பையில் : தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 98 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : பெண்களுக்கான டி - 20 உலக கோப்பையில் கேப்டன் ஹீதர் நைட் சதம் அடிக்க தாய்லாந்தை 98 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி - 20 உலக கோப்பையில் கான்பெர்ராவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் எமி ஜோன்ஸ், டேனி வியாட் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர்.இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். இதனால் 7 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3 - வது விக்கெட்டுக்கு ஸ்கிவர் உடன் கேப்டன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஹீதர் நைட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 66 பந்தில் 108 ரன்களும், ஸ்கிவர் 52 பந்தில் 59 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து களம் இறங்கியது. தாய்லாந்து அணி ரன்கள் குவிக்க தவறினாலும் ஆல்அவுட் ஆகவில்லை. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து