Idhayam Matrimony

கொரோனா சிகிச்சைக்காக ரொனால்டோ ஓட்டலை மருத்துவமனையாக மாற்றவில்லை: நிர்வாகம்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

போர்ச்சுக்கல் : கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சொந்தமான ஓட்டலை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இத்தாலியில் அதிக அளவில் தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.இத்தாலி நாட்டின் முதன்மை கால்பந்து தொடரான ‘செரி ஏ’ அணியில் விளையாடும் அணிகளில் ஒன்று யுவென்டஸ். இந்த அணியில் உள்ள ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. இதனால் அந்த அணியில் உள்ள 121 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.உலகின் தலைசிறந்த வீரரான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவர் சொந்த ஊரான மடேய்ராவில் ரொனால்டோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.இவருக்கு லிஸ்பனில் நட்சத்திர ஓட்டல் உள்ளன.

இந்த ஓட்டலை ரொனால்டோ கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்ற செய்தி வெளியானது.இதை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறியபோது, நாங்கள் ஒட்டல் தான் நடத்துகிறோம். மருத்துவமனையாக மாற்றவில்லை. இனிமேலும் ஓட்டலாகத்தான் இருக்கும். பத்திரிகைகளில் இருந்து போன் வந்த வண்ணமே உள்ளன. சிறந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.போர்ச்சுகலில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து