முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2026      தமிழகம்
OPS 2025-08-17

சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக, நேற்று சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அறைக்கு சென்று பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் சட்டசபையில் பேசினார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தனது ஆதரவு எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசியது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது,

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இன்று சிறப்பாக நிறைவு பெற்றதன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ அதை அய்யப்பன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டுகால நிலை, தி.மு.க. அரசு தமிழகத்திற்கு செய்துள்ள சாதனைகள் மக்களின் மனதில் ஆழமாக பதித்துள்ளது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கே வழி பிறந்துள்ளது. எனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பொறுமையாக இருந்து பாருங்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து