எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பா.ம.க. யாருக்கு..? என்று டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
அதில், 2025-ம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்து விட்டது. எனவே, தேர்தல் ஆணையத்தின் கடித போக்குவரத்து என் முகவரிக்குதான் இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இதுகுறித்து தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அதில் ஒரு வழக்கில், ‘‘பா.ம.க., தலைவராக நான்தான் உள்ளேன். இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
அதன்படி தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது. அதனால், என்னை பா.ம.க., தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
மற்றொரு மனுவில், “பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்மந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்றும் இந்த மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்றும் அறிவிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஒரு அரசியல் கட்சியின் உள் விவகாரம் குறித்து சிவில் கோர்ட்டை அணுகிதான் நிவாரணம் பெறவேண்டும்.
சிவில் கோர்ட்டின் உத்தரவின் படி தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இந்த விவகாரத்தில் தந்தை மகனுக்கு மத்தியில் என்ன பிரச்சனை உள்ளது..?. ஏன் தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா..?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ் தரப்பில், “தந்தையின் பேச்சை மகன் கேட்பது இல்லை” என்று பதிலளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், “பா.ம.க. அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும் எனவே இதில் ஐகோர்ட் தலையிட முடியாது. அதேபோல ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிவிட்டு பிறருக்கு வழங்காமல் முடக்கி வைக்கவும் முடியாது” என்று கூறினார். இதையடுத்து, கோர்ட்டின் நேரத்தை வீண் அடிப்பதற்காக ராமதாசுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற


