முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் அரங்கை கொரோனா வார்டாக பயன்படுத்தி கொள்ளலாம்: மு.க.ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை கலைஞர் அரங்கை கொரோனோ சிகிச்சைக்கான தனிமைப்படுத்துல் முகாமுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தி.மு.க. சார்பில் அனுமதி கடிதம் அளிக்கபட்டுள்ளது. இதற்கான கடிதத்தை மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையரை ஜி.பிரகாஷ் நேரில் சந்தித்து அளித்தனர்.

இது தொடர்பாக, தி.மு.க. அறக்கட்டளை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் தேவையான நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய, மாநில அரசுகளுக்கு தி.மு.க, தன்னால் இயன்ற ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் உதவிகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலய வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை, கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர், தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு சார்பில் கலைஞர் அரங்கத்தை பயன்படுத்திட, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வரும் அதிகாரிகளுக்கு, தி.மு.க.வின் சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து