முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும்: பியூஷ் கோயல்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2025      இந்தியா
INDIA 2024-04-17

Source: provided

மும்பை: இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா வேண்டுகோளை மக்கள் மறந்தனர். ஆனால் பிரதமர் மோடி அதை மீண்டும் உயிர்ப்பித்தார். மேலும் காந்தியின் சுயசார்பு குறித்த அழைப்பை விடுத்தார். அதை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு நல்லமுறையில் சென்றுகொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு நாடுகள். இரு நாட்டு தலைவர்களும் நண்பர்கள், அனைத்து பிரச்சினைகளும் திருப்திகரமாக சரி செய்யப்படும்.

இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் உலக வர்த்தகத்தில் நாடு வலுவான செயல்திறனுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 6 சதவீதம் அதிகரிக்கும். எனவே இந்த ஆண்டையும் சிறப்பாக முடிப்போம் என்று நம்புகிறேன்.

இந்தியா 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 30 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. இது இந்தியா வணிகம் செய்வதற்கு சிறந்த இடம் என்பதை தெளிவாக காட்டுகிறது. உலக நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறது.

மேலும் 5.1 சதவீதம் என்ற மிக குறைந்த வேலையின்மை தரவை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்தியா வாய்ப்புகளின் பூமியாகும். வேலையின்மை உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பது கவர்ச்சிகரமாக இருக்கலாம். உண்மையில் எல்.அன்ட்.டி. மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் ஆட்கள் தேவை இருந்து வருகிறது.

தற்போது ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் உட்கட்டமைப்பை அதிகரிப்பதுடன், முதலீடு, வேலை வாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு மற்றொரு ஊக்கத்தை அளிக்கும். பல நாடுகள் இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து