முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. மகளிரணி மோசமான சாதனை

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2025      விளையாட்டு
18-Ram-86

Source: provided

சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

292 ரன்கள் குவிப்பு...

இந்திய மகளிரணிக்கு எதிரான போட்டியில் ஆஸி. மகளிரணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் நேற்று முன்தினம் (செப். 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்து 49.5 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

ஆஸி. ரசிகர்கள்...

அடுத்து விளையாடிய ஆஸி. அணி 40.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதுவரை, ஆஸி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு மோசமாக தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமுறை ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியின் இந்தத் தோல்வி ஆஸி. ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

ஆஸி.யின் மோசமான தோல்விகள்:

1)  102 ரன்கள் வித்தியாசத்தில் - இந்தியாவுக்கு எதிராக, 2025.

2)  92 ரன்கள் வித்தியாசத்தில் - இங்கிலாந்துக்கு எதிராக, 1973.

3) 88 ரன்கள் வித்தியாசத்தில் - இந்தியாவுக்கு எதிராக, 2004.

4) 84 ரன்கள் வித்தியாசத்தில் - தெ.ஆ. எதிராக, 2024.

5) 82 ரன்கள் வித்தியாசத்தில் - நியூசிலாந்துக்கு எதிராக, 2008.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து