எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.வாக இல்லாத உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனா, பா.ஜ.க. இடையே சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற பிரச்சினையால் கூட்டணி உடைந்தது.
இதையடுத்து காங்கிரஸ், என்.சி.பி. கட்சி களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்து பேசி வந்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் பா.ஜ.க. சார்பில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் பதவியேற்றபோதும் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவர் தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. இதுவரை தேர்தலில் போட்டியிடாத அவர் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. அல்லது சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக ஆக வேண்டும்.தேர்தலை சந்திக்காமல் அதற்கு பதிலாக சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். . மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்தல் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே பதவியேற்று 5 மாதங்கள் ஆகியுள்ளதால் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனால் எம்.எல்.சி. தேர்தலை நடத்த ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எம்.எல்.சி. பதவிக்கு உத்தவ் தாக்கரே பெயரை முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |