Idhayam Matrimony

சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      சினிமா
The-Dark-Heaven 2025-10-19

Source: provided

கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன். க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், சின்னத்திரை நடிகர் சித்து நாயகனாகவும் நாயகிகளாக தர்ஷிகா, ரித்விகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் பிரபல இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசுகையில், ஒரு மலைக் கிராமத்தில்  ஒவ்வொரு ஏழு  ஆண்டுக்குப் பிறகு வருகிற ஜூன் மாதத்தில் ஆண்கள் எல்லாம் இறந்து போவார்கள் என்பது நம்பிக்கை. இதை அடிப்படையாக வைத்துத்தான் டார்க் அந்தத் தலைப்பை வைத்தோம் என்றார். படத்தின் நாயகன் சித்து பேசுகையில்,  எல்லாரையும் போலவே நல்ல படம், நல்ல பாத்திரம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. ஒரு நாள் என்னை இயக்குநர் பாலாஜி தொலைபேசியில் அழைத்தார். போய்ச் சந்தித்தேன், கதை கூறினார். நன்றாக இருந்தது. போலீஸ் வேடம் என்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. இந்தப் படத்தில் அவர் எடுத்திருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது எந்தக் குறையும் சொல்ல முடியாது. நள்ளிரவு இரண்டு மணிக்குப்  படப்பிடிப்பு நடக்கும். இருந்தாலும் அவர் அசராமல் இருப்பார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து