எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். ஒருவேளை நான் விருது வாங்கினால் போகும் வழியிலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன்” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். நான்கு பேர் உட்காந்து கொண்டு 8 கோடி பேருக்கு யார் பிடித்த நடிகர், எது பிடித்த படம் என்று முடிவு செய்யும் அளவுக்கு அவர்கள் என்ன மேதாவிகளா? நான் தேசிய விருதுகளையும்தான் சொல்கிறேன். நீங்கள் சர்வே எடுங்கள். மக்கள் சர்வே தான் முக்கியம். இவர்கள் தான் சிறந்த நடிகர் என்று நீங்களே எப்படி முடிவு செய்யமுடியும்? எனக்கு அப்படியான விருதுகளில் நம்பிக்கை கிடையாது. எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக நான் இப்படி பேசவில்லை. அதற்கான வரையறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஒருவேளை நான் விருது வாங்கினால் போகும் வழியிலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன். அது தங்கமாக இருந்தால் அதை அடகு வைத்து அந்த பணத்தை அன்னதானம் செய்து விடுவேன். என்னுடைய புரிதல் இது. இது மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்களுக்கு விருதுகள் கவுரவமான ஒன்றாக இருக்கலாம்” என்று விஷால் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


