முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்தின் வீடியோ வைரல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : எம்.எஸ். டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி அனிருத் அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ். டோனி. இவர் நேற்று தனது  39-வது பிறந்த நாளை கொண்டாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரபல சினிமா இசைப்பாளர் அனிருத் ரஜினி ஸ்டைலில் தனது வாழ்த்தை மியூசிக் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். பின்னணி இசையுடன் ஒவ்வொரு எழுத்தாக  ‘SUPER STAR RAJINI’ வந்த போது தியேட்டர் ரசிகர்களின் கைத்தட்டலாம் அதிர்ந்தது. அதன்பின் ரஜினி நடித்த படங்களில் யார் இசை அமைத்தாலும் இந்த பின்னணி மியூசிக் உடன் ரஜினி பெயர் திரையில் தோன்றும்.  ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் மரணம்... மாசு மரணம்... என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.  

நேற்று எம்.எஸ். டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது இசையின் மூலம் சிறப்பான வகையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். ரஜினியின் டைட்டில் பெயர் வருவதுபோல் எம்.எஸ். டோனி பெயர் வருவது போல் உருவாக்கி, அதன்பின் மரணம்... மாசு மரணம்... என வரிகளுக்கு எம்.எஸ். டோனி அறிமுகம் ஆவது போன்று அனிருத் வீடியோ வெளியிட்டுயிருக்கிறார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து