முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பினராய் விஜயன் எச்சரிக்கை

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய தருணம் இதுவல்ல என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக உள்ளது. கேரளாவில் இதுவரை 6950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். 3820 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3103 மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன், மாநில மக்களுக்கு கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-  

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாம் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல. நாம் அதிகம் தியாகம் செய்துள்ளோம். கொரோனாவை ஒருமுறை கட்டுப்படுத்தி உள்ளோம். அதேபோல் ஒன்றிணைந்து அதை மீண்டும் செய்யப் போகிறோம். நம்மால் முடியும். எப்படி கட்டுப்படுத்துவது என்பதும் நமக்கு தெரியும். சமூக விலகலை பின்பற்றுங்கள்; முக கவசம் அணியுங்கள்; அடிக்கடி கைகளை கழுவுங்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து