முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - போர்ட் பிளேயரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம்: பிரதமர் மோடி 10-ம் தேதி திறந்து வைக்கிறார்.

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சென்னை - போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீள கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.

சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை (ஓ.எப்.சி) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10-ம் தேதி திங்கள்கிழமை திறந்து வைக்கிறார். வீடியோ கான்பரன்சிங் மூலம் அந்தமான் மற்றும் நிக்கோபாருடனான இணைப்பை அதிகரிக்கும் திட்டத்தை பிரதமர் தேசிய அளவில் திறந்து வைக்கிறார். 

கடல்வழி கண்ணாடி இழை திட்டம் (ஓ.எப்.சி) போர்ட் பிளேரை ஸ்வராஜ் ட்வீப் (ஹேவ்லாக்), லிட்டில் அந்தமான், கார் நிக்கோபார், கமோர்டா, கிரேட் நிக்கோபார், லாங் ஐலேண்ட் மற்றும் ரங்காட் ஆகியவற்றுடன் இணைக்கும்.

இந்த திட்டம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இணையாக அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்க உதவும்.  இந்த திட்டத்திற்கு பிரதமர், டிசம்பர் 30, 2018 அன்று போர்ட் பிளேரில் அடிக்கல் நாட்டினார். 

சுமார் 2300 கி.மீ நீர்மூழ்கிக் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் சுமார் 1224 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டம் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கேபிள் பிரதான நிலப்பரப்புடன் தீவுகளின் டிஜிட்டல் இணைப்பை அதிகரிக்கும் மற்றும் இணைய இணைப்பை தற்போதுள்ள திறனை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும். இந்த திட்டத்திற்குப் பிறகு, இது வினாடிக்கு 400 ஜிகாபைட் (ஜி.பி.) தரவு வேகத்தைப் பெறும்.

கடல்வழி கண்ணாடி இழை  இணைப்பு சென்னை மற்றும் போர்ட் பிளேருக்கு இடையில் வினாடிக்கு 2 x 200 ஜிகாபிட் (ஜி.பி.பி.எஸ்) அலைவரிசையையும், போர்ட் பிளேயருக்கும் பிற தீவுகளுக்கும் இடையில் 2 x 100 ஜி.பி.பி.எஸ் வழங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து