முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

78-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      தமிழகம்
EPS-1-2026-02-24

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ.் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.  ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து