எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும் உள்பட அ.இ.அ.தி.மு.க.வின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 3-ம் கட்டமாக சில தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம்போல ஏறியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
மக்களின் சுமையைக் குறைக்கும்பொருட்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும். மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு தற்போது ரூ. 8,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது அ.தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
தைப்பொங்கலையொட்டி பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும். நகரப் பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
முன்னதாக முதல் கட்ட வாக்குறுதிகளில், சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குலவிளக்குத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். இந்தத் தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதேபோல் ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது இருக்கும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் அரசு சார்பில் இடம் வாங்கி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இடம் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரப்படும். ஒரே வீட்டில் வசிக்கும் பட்டியலின மக்கள், மகன்கள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்லும்போது அரசு சார்பில் இடம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள்களாக உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும். அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதேபோல் 2-ம் கட்ட அ.தி.மு.க.வின் வாக்குறுதிகளில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 1,200-இல் இருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அந்த தொகையை அரசே ஏற்கும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமான வழங்கப்படும்.
ஜல்லிகட்டில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். அரசாணை வெளியிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
3-ம் கட்ட வாக்குறுதிகள்:
1. ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
2. வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய்.
3) +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய்.
4) மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
5) தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும்.
6) கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 450 யூனிட்டாக உயர்வு.
7) விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
8) கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்க ராணுவத்தளபதி குறித்த கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் விளக்கம்
24 Feb 2026வாஷிங்டன், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொ
-
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து: தமிழக கவர்னர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Feb 2026சென்னை, அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா-உக்ரைன் போா்
24 Feb 2026கீவ், ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை உள்பட அ.இ.அ.தி.மு.க.வின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
24 Feb 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.
-
தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம் : 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்
24 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை: இன்று தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
24 Feb 2026சென்னை, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய குழுவினர் இன்று தமிழகம் வருகிறார்கள்.
-
இளைஞர் காங். தலைவர் கைது: போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி ஐகோர்ட் அனுமதி
24 Feb 2026புதுடெல்லி, ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
-
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தென்னக ரயில்வே இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் : கனிமொழி எம்.பி. தகவல்
24 Feb 2026தென்னக ரயில்வே பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
-
குமரியில் ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
24 Feb 2026நாகர்கோவில், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை தமிழ்நாடு முதல்வர் மு
-
வரும் 1-ம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
24 Feb 2026சென்னை, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க. கூட்டத்தில் விதிமுறைகள் மீறல் வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம்
24 Feb 2026சென்னை, விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக த.வெ.க.
-
எனக்காக துப்பாக்கியுடன் பலர் காத்திருக்கிறார்கள்..! அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவை
24 Feb 2026புளோரிடா, எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?
-
78-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2026சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ.் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்: ஈரான்-அமெரிக்கா நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
24 Feb 2026ஜெனீவா, அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் நாளை (பிப்.26ம் தேதி) 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
-
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கல்வியில் புதிய உயரங்களை அடைவதில் நாம் பெருமிதம் கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
24 Feb 2026சென்னை, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கல்வியில் புதிய உயரங்களை அடைவதில் நாம் பெருமிதம் கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியுரிமையை பெற்று தர போராடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
24 Feb 2026சென்னை, இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்.
-
நாளை இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி: பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
24 Feb 2026ஒட்டவா, கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.


