ஒவ்வொரு நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபா கிடையாது: ஜாப்ரா ஆர்சர் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Zabra Archer 2020 07 31

Source: provided

மான்செஸ்டர் : ஒவ்வொரு நாளும் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபா கிடையாது என்று ஜாப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 92 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. 

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்த போதிலும், இரண்டு நாட்களின் முதல் செசனில் மட்டுமே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு இவர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது.

உணவு இடைவேளைக்குப்பிறகு இங்கிலாந்து பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் இல்லை. ஆனால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அப்பாஸ், ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். 

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் திடீர் பவுன்சராகவும், அதிவேகமாகவும் பந்து வீசக்கூடியவர். ஆனால் மான்செஸ்டரில் அவரின் தீப்பொறி பந்து வீச்சை காண இயலவில்லை.  59 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில், நாங்கள் நினைத்த மாதிரி ஆட்டம் சென்றதாக நினைக்கவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது.

ஆனால் அவைகள் கேட்ச்-ஆக மாறவில்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து எங்களை நெருக்கடிக்குள்ளாக்கினர். ஆனால்., மற்றொரு டெஸ்ட் போட்டியில் நாங்கள் நினைத்தவாறு சென்றால், கட்டாயம் இரண்டு செசனுக்குள் 8 அல்லது 9 விக்கெட்டை வீழ்த்தி விடுவோம். 

ஒவ்வொரு நாளும் மணிக்க 90 மைல் வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபோ கிடையாது. இந்த ஆடுகளம் பந்தை பவுன்ஸ் செய்வதற்கானதாக இருக்கவில்லை. காலையில் மற்றும் சற்று ஒத்துழைத்தது. அதன்பின் பந்து டர்ன் ஆக ஆரம்பித்தது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து