முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      தமிழகம்
Helicopter --

Source: provided

செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருப்போரூர் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விமானத்தில் பயணித்த 3 பேர், பாராசூட் மூலம் முன்னதாகவே விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.

கோளாறு ஏற்பட்ட விமானம், கட்டுமானப் பணி நடைபெற்ற இடம் ஒன்றுக்கு அருகே சகதியில் விழுந்து நொறுங்கியது. ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் விமானம் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் எங்கிருந்து வந்தது? எங்கே சென்றுகொண்டிருந்தது? கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை அருகே நேற்று முன்தினம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சாலையில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து