எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சென்னை-போர்ட்பிளேர் கடல்வழி நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, எளிய வாழ்க்கைக்கான முயற்சியின் அடையாளம் என பேசினார்.
சென்னையையும், அந்தமான் போர்ட்பிளேரையும் கடல்வழியாய் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தினை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்து பேசினார்.
இந்த கேபிள், சென்னையையும், போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கத் தீவுகளையும் இணைக்கிறது.
இதன் மூலம், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளைப் போன்று செல்போன், லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் கிடைக்கும்.
இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டத்துக்கு 2018-ம் ஆண்டு, டிசம்பர் 30-ம் தேதி போர்ட்பிளேரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224 கோடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்மூலம், சென்னை - போர்ட்பிளேர் இடையே நம்பகமான, வலுவான, அதிவேக தொலைத்தொடர்பு, பிராட்பேண்ட் இணையதள சேவை வசதிகள் கிடைக்கும். இத்திட்டம் பற்றி பிரதமர் மோடி பேசும் போது,
குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே, கடலுக்கு அடியில் 2,300 கி.மீ. நீளத்திற்கு கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன என்பது பாராட்டுக்குரியது. ஆழ்கடல் ஆய்வுகள், கேபிளின் தரம் பராமரிப்பு மற்றும் சிறப்பு கப்பல்களை கொண்டு கேபிள் பதிப்பது என்பது எளிய விசயம் அல்ல.
நாட்டின் பிற பகுதிகளுடன் அந்தமான் நிகோபரை இணைக்கும் இந்த திட்டம், வாழ்க்கையை எளிய முறையில் அமைத்து கொள்வதற்கான எங்களுடைய முயற்சியின் அடையாளம் ஆகும்.
ஆன்லைன் வகுப்புகள் ஆகட்டும், சுற்றுலா, வங்கி சேவை, ஷாப்பிங் செய்தல் அல்லது தொலை மருத்துவம் ஆகட்டும் அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இனி அதன் பயனை பெறுவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


