முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு

சனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020      இந்தியா

புதுடெல்லி : ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

நாட்டின் 74-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது சுகாதார அடையாள அட்டைக் குறித்து அவர் தெரிவித்தார்.

அதாவது தேசிய மின்னணு சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். பிரதமர் மோடி அறிவித்த இந்த திட்டம் முற்றிலும் டிஜிட்டல் மயமானது ஆகும். சுகாதாரத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

இந்த திட்டம் பற்றி விளக்கிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தனித்தனியே சுகாதார அடையாள அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் அந்த குறிப்பிட்ட நபர் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும்.

ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்லும் போது, அந்த சுகாதார அட்டையில் சிகிச்சை குறித்த விவரம் இடம் பெறும். மருத்துவர்களின் முன் அனுமதிபெறுவது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அட்டையில் இடம் பெறும். 

இந்த திட்டத்தில் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் சுகாதார அடையாள அட்டையில் குறிப்பிடப்படும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்பாக வைக்கப்படும், மருந்துகள் வழங்கப்பட்டவை, நோய்சிகிச்சை குறித்த விவரங்கள், டிஸ்சார்ஜ் விவரங்கள், மருத்துவர்கள் உங்களுக்கு என்ன மருந்துகளை பரிந்துரைத்தார் என அனைத்து மருத்துவ தகவல்களும் இதில் இடம் பெறும். 

மருத்துவமனைக்கு செல்லும் போது, சுகாதார ஐ.டியை ஒரு முறை பயன்படுத்திக்கொள்ள நோயாளிகள், மருத்துவர்களுக்கு இசைவு கொடுக்க முடியும். ஒவ்வொரு முறை மருத்துவர்களை பார்க்க செல்லும் போது தனித்தனியாகவே மெடிக்கல் தரவுகளை மருத்துவர்கள் அணுக இசைவு கிடைக்கும். எனவே, மருத்துவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே இவற்றை பார்க்க முடியும்” இவ்வாறு அவர் பேசினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து