முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி காலமானார் : அதிபர் டிரம்ப் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்து வந்தவர் ரூத் பேடர் கின்ஸ்பர்க். இவர் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 87.  பெண் உரிமை ஆர்வலரான ரூத் பேடர் கின்ஸ்பர்க் நாட்டின் மிகவும் வயதான நீதிபதி மற்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் 2-வது பெண் நீதிபதி என்கிற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். 

 1993-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பில் கிளிண்டனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரூத் பேடர் கின்ஸ்பர்க் தாராளவாதத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

அதுமட்டுமின்றி மரண தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது பதவிக்காலத்தில் ஊனமுற்றோர் மற்றும் 18 வயதுக்கு குறைவான கொலையாளிகளுக்கு மாகாண கோர்ட்டுகள் மரண தண்டனை விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அதிபர் டிரம்ப், ரூத் பேடர் கின்ஸ்பர்க் நாட்டின் சிறந்த பெண்மணி என புகழாரம் சூட்டினார்.   சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எங்கள் தேசம் வரலாற்று சிகரத்தை இழந்து விட்டது. நாங்கள் ஒரு நேசத்துக்குரிய சக ஊழியரை இழந்து விட்டோம். ஆனால் வருங்கால சந்ததியினர் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கை நாங்கள் அறிந்ததைப் போலவே நினைவில் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து