பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சு நடத்த இந்தியா - சீனா சம்மதம்

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      இந்தியா
India-China 2020 09 22

Source: provided

புதுடெல்லி : கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா - சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையிலான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததில் இருந்து எல்லை அருகே பதற்றம் நிலவி வருகிறது. லடாக் எல்லையில் இருந்து சீன ராணுவம் முற்றிலுமாக விலக மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே ஆகஸ்ட் 29-ம் தேதி இந்திய ராணுவம் பாங்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் முன்னேறி நிலைகொண்டுள்ளது.  பாங்காங் ஏரியில் இந்திய ராணுவம் முன்னேறியதை சீனா எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கமாண்டர் அளவிலான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது லடாக் பகுதியில் ஏப்ரல்-மே மாதத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு சீன ராணுவம் பின்னோக்கி செல்ல வேண்டும் என இந்தியா வலியுறத்தியது. 

அதேவேளையில் பாங்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் இந்திய ராணுவம் முன்னேறிய நிலையில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. 

இந்நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும், பதற்றமாக சூழ்நிலையை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடர்பு வழிகளை வைத்திருக்கவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து