முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் கலாச்சார ஆய்வு குழுவை கலைக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு 32 எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதில், தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதனை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இதற்கிடையில் கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், கலாச்சார ஆய்வு தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதில், இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை கலைக்க வேண்டும். மத்திய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட ஆய்வாளர்கள் அந்த குழுவில் இல்லை, பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிபுணர் குழு இல்லை.  தற்போதைய குழுவின் ஆய்வு வரலாற்று திரிபுகளுக்கு இது வழிவகுத்து விடும் என்று அந்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து