முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : கடந்த 25-ம் தேதி காலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சிகிச்சை கட்டணம் தொடர்பாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர், எஸ்.பி.பி., கடந்த 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவர் சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, எஸ்.பி.பி., குடும்பத்தினரால் கட்ட முடியாமல் போனதால், துணை ஜனாதிபதி உதவியுடன், எஸ்.பி.பி., உடல் பெறப்பட்டதாக தகவல் பரவியது. இதனை எஸ்.பி.பி. மகன் சரண் திட்டவட்டமாக மறுத்திருந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.பி. சரண் மற்றும் எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகிகள் நேற்று கூட்டாக நிருபர்களை சந்தித்து சிகிச்சை கட்டணம் தொடர்பாக விளக்கமளித்தனர்.  அப்போது சரண் கூறுகையில்;

எஸ்.பி.பி.,க்கான மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. சிகிச்சை கட்டணம் குறித்து வெளியான தகவல் தவறானது. எஸ்.பி.பி. சிகிச்சைக்கு நாங்களும், மருத்துவ காப்பீடு மூலமும் அவ்வபோது கட்டணம் செலுத்தி வந்தோம்.

அவர் மறைவுக்கு பின்னர் சிகிச்சை கட்டணம் பற்றி கேட்ட போது வேண்டாம் என மருத்துவமனை கூறிவிட்டது. மருத்துவமனை தலைவர் பணம் வாங்க மறுத்து உடலை பத்திரமாக அனுப்பி வைத்தார்.

எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அரசு கூறியிருந்தது. கட்டணத்தை செலுத்த யாருடைய உதவியையும் நாடவில்லை.  கொரோனா காரணமாக எஸ்.பி.பி., மரணமடையவில்லை.

நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்தார். எதிர்பாராத மரணம் என்பதால், அதனை ஜீரணிக்க நீண்ட காலமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து