கொரோனாவில் இருந்து மீண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      இந்தியா
Nitin-Gadkari 2020 09 30

Source: provided

புதுடெல்லி : மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக நேற்று தெரிவித்தார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், வாழ்த்துக்களாலும், நான் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், உங்கள் அனைவரின் பாசத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார். 

நிதின் கட்கரிக்கு கடந்த 16-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து