முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      இந்தியா
SIR 2025-11-17

திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

கடந்த நவ.22 முதல் டிச.20 வரை அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடா்ந்து மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி மாநிலத்தில் மொத்தம் 2,51,09,754 வாக்காளா்கள் உள்ளனா். 10,56,291 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4,78,992 போ் உயிரிழந்தவா்கள். 5,23,680 போ் பதிவு செய்யப்பட்ட தங்கள் முகவரிகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறியவா்கள். 53,619 பேரின் பெயா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

இதுதவிர 93,021 போ் சந்தேகத்துக்குரிய வாக்காளா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். தங்கள் குடியுரிமையை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாதவா்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளா்கள் என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளனா். தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, அடுத்த ஆண்டு ஜன.22-ஆம் தேதி வரை, தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை தோ்தல் ஆணையத்திடம் வாக்காளா்கள் சமா்ப்பிக்கலாம். பிப்.10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து