முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் அணியினர் எங்களை எல்லா துறைகளிலும் விரட்டியடித்து விட்டனர்: ரிக்கி பாண்டிங் வேதனை

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : ஐதராபாத் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ரன்கள் குவித்தது, எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அபு தாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் பேர்ஸ்டோவின் அரைசதம்  ஹைதராபாத் 162 ரன்கள் அடித்தது.

டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் கடுமையான பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 102 ரன்கள் எடுத்தது.  பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

புவனேஷ்வர் குமார், ரஷித் கான், நடராஜன் ஆகியோரின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி கேப்பி்ட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் திணறினார்கள்.

இதனால் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.  ஆகவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பெற்றது.   

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை கோட்டை விட்டது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், சீதோஷ்ண நிலை மாறுபட்டதாக நான் நினைக்கவில்லை இந்த மைதானம் மிகவும் பெரியது.

பவுண்டரி எல்லை பெரியது. ஆனால் நேற்று முன்தின ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எங்களை முற்றிலும் துவம்சம் செய்து விட்டனர்.  

எங்களுடைய சூப்பர் பார்மில் இருந்து சற்று தவறி விட்டோம். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்தது சிறப்பானது. மேலும் அவர்களில் சில பெரிய ஸ்கோரை எட்டிவிட்டனர். இதுதான் போட்டியின் முக்கியமான வேறுபாடு. 

எங்களது முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் 60 அல்லது 70 ரன்கள் வரை எடுத்தால் நாங்கள் நிச்சயமாக அந்த போட்டியில் வெற்றி பெறுவோம்.

இந்தப் போட்டியை பார்த்தீர்கள் என்றால் நாங்கள் 15 ரன்களில் மட்டுமே தோல்வியடைந்தோம். இந்த தோல்வியால் நாங்கள் யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. ஒரு அணியாக தோல்வியை சந்தித்தோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து