முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா - சகோதரி மீது வழக்கு பதிவு

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

புனே : இரு சமூகங்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிட்டார் என்ற புகாரின் பேரில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இந்தி திரையுலகம் மற்றும் மும்பை போலீசார் விசாரணை நடத்தும் விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் கடும் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய அவர், சினிமாவில் வரும் மாபியாவை விட மும்பை போலீசாரை பார்த்து பயப்படுவதாகவும் தாக்கி பேசினார். 

நடிகை கங்கனா ரணாவத்தின் சர்ச்சைக்குரிய வகையிலான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாஹில் அஷ்ரப் அலி சையது என்பவர் மும்பை நீதிமன்றம் ஒன்றில் புகார் மனு அளித்துள்ளார். அதில், பிரபல நடிகை மற்றும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்டுள்ளவர் என்று நடிகை கங்கனாவுக்கு தன்னை பற்றி நன்கு தெரியும். 

அதனால் அவரது டுவிட்டர் பதிவுகள் பலருக்கும் சென்று சேரும் என்று சுட்டி காட்டியுள்ளார். அவர் இந்து மற்றும் முஸ்லிம் கலைஞர்களுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறார். பாலிவுட் படங்களில் பணியாற்றும் நபர்களை போதை அடிமைகள், சமூகம் சார்ந்த நபர்கள், கொலைகாரர்கள் உள்ளிட்ட வகையில் நடிகை கங்கனா சித்தரித்து வருகிறார் என்றும் தெரிவித்து உள்ளார். 

நடிகை கங்கனாவின் மின்னணு ஊடக பதிவுகள், டுவிட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், நடிகை கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டெல் பெயரையும் தனது புகாரில் சாஹில் சேர்த்து உள்ளார். இதனை தொடர்ந்து இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில், 124ஏ (தேச துரோகம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சாண்டெல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து