முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் தோனியின் தொடர் சாதனைகள்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஆட்டத்தில் விளையாடுகின்றன.  இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

போட்டியில் டாஸ் போடும்பொழுது டேனி மோரீசன், ஐ.பி.எல்.லில் தோனிக்கு இது 200வது போட்டி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் கூறினார்.

இதுபற்றி தோனி மோரீசனிடம் கூறும்பொழுது, நீங்கள் கூறிய பின்னரே அதுபற்றி (ஐ.பி.எல்.லில் 200வது போட்டி) எனக்கு தெரிய வந்தது.  நல்லது என்று உணர்கிறேன்.  ஆனால் அதேவேளையில், அது வெறும் எண்களே.  நீண்ட காலம் ஆக பல காயங்கள் ஏற்படாமல் விளையாடி வருகிறேன் என்பதே அதிர்ஷ்டவசம் என நான் உணர்கிறேன் என்று கூறினார். 

தோனி தனது ஐ.பி.எல். பயணத்தில், 2 அணிகளில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளார்.  ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  மற்றொன்று ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி (சென்னை அணி 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்ட காலத்தில்) ஆகும். 

இதன்பின்னர், போட்டியில் விளையாடிய தோனி மற்றொரு சாதனையையும் படைத்து உள்ளார்.  அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 4 ஆயிரம் ரன்களை பதிவு செய்துள்ளார்.  இதேபோன்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தனது 50வது கேட்ச்சை பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து