மதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை : அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க.வினர் பங்கேற்பு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      தமிழகம்
OPS 2020 10 24

Source: provided

மதுரை : மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.  

வேலுநாச்சியாருக்கு வீரத் தளபதிகளாக திகழ்ந்து ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் சின்ன மருது, பெரிய மருது என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் ஆவார்கள்.  அக்டோபர் மாதம் 24-ம் தேதி மருது சகோதரர்களை ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அ.தி.மு.க. சார்பிலும், அரசின் சார்பிலும் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது,

நேற்று 219-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்திருந்தார். இதில் கட்சியின்  ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரம் தீபம் ஏற்றி வழிபாடு செய்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து மருது பாண்டியர்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்தினை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிகளில் அம்மா பேரவை மாநில செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் எம். முத்துராமலிங்கம் ,மதுரை மாநகர் மாவட்ட  பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சி. தங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பி. குமார், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, பகுதி கழக செயலாளர்கள் ஏ.கே. முத்து இருளாண்டி, கே.ஜெயவேல், வி.கே. எஸ் மாரிச்சாமி, கருப்புசாமி, மகேந்திரன், செந்தில் குமார், அண்ணா நகர் முருகன், மாவட்ட அணி செயலாளர்கள் சோலைராஜா, இந்திராணி, தமிழ்செல்வன் ,அரவிந்தன், மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக துணை முதல்வருக்கு வரும் வழியில் முடக்கு சாலை, காளவாசல், கிரம்மர் புரம், சிம்மக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு துணை முதல்வருக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து