வந்தே பாரத் திட்ட 7-ம் கட்ட சேவை நாளை முதல் துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Hardeep-Singh-Puri 2020 10

Source: provided

புதுடெல்லி : வந்தே பாரத் திட்டத்தின் கீழ், நாளை 29-ம் தேதி முதல் 7-ம் கட்ட சேவை தொடங்க உள்ளது.

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். தற்போது உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியின் 7-ம் கட்டம் நாளை 29-ம் தேதி தொடங்குவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர்.

வந்தே பாரத் திட்டத்தின் ஏழாவது கட்டம் நாளை 29-ம் தேதி தொடங்க உள்ளது.  மேலும் இன்று 28-ம் தேதி மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருச்சி - மஸ்கட் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. நவம்பர் 16-ம் தேதி திருச்சி - பஹ்ரைன் இடையே சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து