முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்கில தேர்வில் தோல்வி: 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணிநீக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      உலகம்
Truck

Source: provided

வாஷிங்டன்: ஆங்கில தேர்வில் தோல்வி அடைந்ததால் 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி டிரைவர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரித் தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் டிரைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து