சென்னை : பொங்கல் பண்டிகைக்கு, சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டுக்கான சுப்ரீம் கோர்ட் விடுமுறை நாள்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதல் முறையாகத் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் வரலாற்றிலேயே பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அளித்து, தைத்திருநாளின் சிறப்பினை தேசமறியச் செய்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்பதுடன், சுப்ரீம் கோர்ட்டிற்கு உலகத் தமிழர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.